அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் படுகாயம்

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி ராஜலெட்சுமி (32). இவர் நார்த்தாமலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ராஜலெட்சுமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜலெட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராஜலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் மார்ட்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி