தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா?

69பார்த்தது
தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா?
டி20 உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பார்படாஸ் மைதானத்தில் இந்தியக் கொடியை நட்டு வைப்பது போன்ற படத்தை தனது எக்ஸ் தள ப்ரொபையிலாக வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ரோகித் சர்மா மூவர்ணக் கொடியை அவமதித்து விட்டதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2-இன்படி, தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி