கந்தர்வகோட்டை கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!

70பார்த்தது
கந்தர்வகோட்டை கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!
கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த எட்டாம் திருமுறை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி ஆலய மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, பஜனை, திருவாசக முற்றோதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் சம்பந்தமூர்த்தி பங்கேற்றார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள் செய்தனர்.
நிகழ்வில் பள்ளி மாணவர்கள் நல்ல நிலைக்கு உயரக் கோரி பிரார்த்தனை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி