கந்தர்வகோட்டை பகுதிகளில் தொடர் வழிப்பறி: 3 பேர் கைது!

565பார்த்தது
கந்தர்வகோட்டை பகுதிகளில் தொடர் வழிப்பறி: 3 பேர் கைது!
கந்தர்வகோட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பான புகாரின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார். கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், போலீசார் மாரிமுத்து, ஜானகிராமன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தஞ்சை மாவட்டம் குருங்குளத்தை சேர்ந்த ராமையன் மகன் ராமச்சந்திரன்(18), புண்ணியமூர்த்தி மகன் அறிவழகன்(20), தஞ்சாவூர் கருக்காவயல் காமாட்சி மகன் செல்வம் (23) என்பதும், கந்தர்வகோட்டை அருகே உள்ள நாட்டானி, கல்லுப்பட்டி வளவம்பட்டி ஆகிய இடங்களில் முகமூடி அணிந்து அந்த வழியாக வந் தவர்களிடம் ஆயுதங்களை காண்பித்து மிரட்டி பணம், நகை, செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி