கோமாபுரத்தில் சாலைகளில் தரம் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்!

586பார்த்தது
கோமாபுரத்தில் சாலைகளில் தரம் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோமாபுரம் ஊராட்சி, கோமாபுரம் நடுத்தெருவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சாலை மேம்பாடு செய்யும் பணியின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப. , இன்று (03. 01. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், இ. ஆ. ப. , கந்தர்வக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா. ரெத்தினவேல், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி