பஸ் ஸ்டாண்டு மருந்து கழிவு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது!

59பார்த்தது
பஸ் ஸ்டாண்டு மருந்து கழிவு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது!
அறந்தாங்கி மணமேல்குடி பஸ் ஸ்டாண்டு மருந்து கழிவு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. அதில் கால்நடை செத்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து அப்புறபடுத்த வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பஸ் ஸ்டாண்டில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைத்து குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். கோழி இறைச்சி, மருந்து கழிவு உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் பஸ் ஸ்டாண்டில் கொட்டுவதால் இந்த கழிவுகளை நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்று வருகிறது. அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அள்ளி செல்கின்றனர். குப்பை கொட்டுவதற்கு என்று தனி இடம் அமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லாததால் இங்கு அனைத்து குப்பைகளும் கொட்டப்பட்டு குப்பை மேடாக உள்ளது. இந்த மருந்து கழிவு, இறைச்சி கழிவுகளை சாப்பிடும் கால்நடைகள் செத்து கிடக்கிறது. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மணமேல்குடி பஸ் ஸ்டாண்டில் செத்து கிடக்கும் மாடு, கொட்டப்பட்டு உள்ள அனைத்து குப்பைகளையும் உடனே அப்புறபடுத்தி. இனிவரும் நாட்களில் யாரும் பஸ் ஸ்டாண்டில் இறைச்சி கழிவு, மருந்து கழிவுகளை கொட்டாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி