புன்னகை அறக்கட்டளை பள்ளிகளில் மரக்கன்றுகள் வழங்கும் விழா!

80பார்த்தது
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளை சார்பாக பள்ளிகள் தோறும் மரகன்றுகள்
வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா சுள்ளனி ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின்
தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது அதன் முன்னோட்டமாக
சுள்ளனி கிராமத்தை
சேர்ந்த புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினர் அந்தோணிசாமி ,
மலர்விழி அவர்களின்
திருமண நாள் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர்
காமராசர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியை அருள்மேரி
அவர்கள் தலைமையில்
அந்தோணிமுத்து முன்னிலையில்
பள்ளி மாணவ மாணவிகளுக்கு மா, பலா, நெல்லி, கொய்யா ஆகிய மூன்று இலவச மரகன்றுகள் இனிப்புகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில். பள்ளிஆசிரியர் ந. பழனிக்குமார்,
புன்னகை அறக்கட்டளை நிறுவனர்
ஆ. சே. கலைபிரபு , செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டு மரகன்றுகள், விழிப்புணர்வு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி