அறந்தாங்கி- புதுகைக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க கோரிக்கை!

64பார்த்தது
அறந்தாங்கி- புதுகைக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க கோரிக்கை!
அறந்தாங்கி புதுகை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் அறந்தாங்கி ஒன்று. இங்கு நகராட்சி அலுவலகம் , டிஎஸ்பி அலுவலகம் , ரயில் நிலையம் , பஸ் நிலையம், நூற்பாலை மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அரசின் சார்பில் டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய பெண்கள் டவுன் பஸ்சையை நம்பி உள்ளனர். அறந்தாங்கி புதுக்கோட்டை மார்க்கத்தில் போதிய அளவு டவுன் பஸ்கள் இல்லை. இதனால் பெண் கூலி தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் டவுன் பஸ்க்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி