ஆவுடையார்கோவில்: குளக்கரையில் வாலிபர் மர்ம மரணம்

1562பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே கமலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (34). இவர் சம்பவத்தன்று குறிச்சிக்குளம் கோயில் குளத்துக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணிக்கவாசகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து மாணிக்கவாசகம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி