அறந்தாங்கியில் சோழா குஜிரியோ கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் தகுதி பட்டை வழங்குவதற்கான தேர்வு முகாம் நடந்தது. கராத்தே பயிற்சி பெற்றவர்களுக்கு மஞ்சள், பச்சை, ஊதா, பழுப்பு நிற தகுதி பட்டைகள் வழங்குவதற்காக அவரவர் தகுதிகேற்ப ஓடுகள் உடைக்கும் பயிற்சி ஆசான் கராத்தே கண்ணையன் தலைமையில் நடந்தது. பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஓடுகளை உடைத்து பயிற்சியை நிறைவு செய்தனர்.