புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் நாட்டு படகுகள் ஆய்வு!

73பார்த்தது
மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள மீனவ கிராமங்களில் 500க்கும் அதிகமான விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்பட்டகுகள் உள்ளன. ஆண்டுதோறும் கடலில் மீன்வளத்தை பாது காக்கும் வகையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்கா லம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வர்ணம் பூசுதல், இன்ஜின் பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

அதே போல் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதும் வழக்கம். நடப்பாண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கியது. ஜூன் 14ம் தேதி நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் விசைப்படகுகளை மீன்வளத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அடுத்தக்கட்டமாக கட்டுமாவடி முதல் மீமிசல், ஏனாதி வரை உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண் டனர். பதிவு செய்யப்படாத படகுகள் கண்டறியப் பட்டு உடனடியாக பதிவு செய்யுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி