புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுனைய காடு கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சின்ன மாடு, தேன்சிட்டு மாடு ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரிய மாட்டு பிரிவில் 7 மாட்டு வண்டிகளும் சின்ன மாடு பிரிவில் 15 மாட்டு வண்டிகளும் தேன்சிட்டு பிரிவில் 27 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன
இதில் தேனி, கம்பம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்க பணமும் வெள்ளி தார்கம்பு, கேடயமும் வழங்கப்பட்டது. இவ்விழாவையும் சுனையக்காடு பார்க்கவ குல உடையார் சமுதாயத்தினர் நடத்தினர். இந்த பந்தயத்தை காண சாலையில் இருபுறம் பந்தய ரசிகர்கள் குவிந்தனர்.