தண்ணீர் திறந்து விட அமைச்சர் மெய்யநாதனிடம் விவசாயிகள் மனு!

75பார்த்தது
தண்ணீர் திறந்து விட அமைச்சர் மெய்யநாதனிடம் விவசாயிகள் மனு!
கல்லணை கால்வாய் பாசன சங்கத்தின் சார்பாக மாவட்ட கல்லணை பாசனத்தாரர் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் மற்றும் விவசாயிகள் அமைச்சர் மெய்யநாதனிடம் மனு அளித்தனர்.

அதில், புதுக்கோட்டை மாவட்ட கல் லணை கால்வாய் பாசன கடைமடை பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 31 அடி மட்டுமே இருந்ததால் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் 70 அடி அளவு உள்ளது. இந்த நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால் தான் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசனத்தில் நடைபெற்று வருகிற விவசாயத்தை மீட்க முடியும். எனவே 27 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி