இரு டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்!

563பார்த்தது
கந்தர்வகோட்டை அருகே உள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (60). இவர் மட்டங்கால் கருப்பர் கோவில் அருகே டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கந்தர்வகோட்டை மகாத்மா நகரை சேர்ந்த ரவி என்பவர் ஓட்டி சென்ற டூவீலர் பெருமாள் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெருமாளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :