அறந்தாங்கியில் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை!

54பார்த்தது
அறந்தாங்கியில் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை!
அறந்தாங்கி நகருக்கு புறவழிச்சாலை அமைக்கவேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கைவிடுத் துள்ளனர். அறந்தாங்கி 27 வார்டுகளை கொண்ட நகராட்சி. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி தாலுகாவினை சேர்ந்த அனைத்து வாகனங்களும் அறந்தாங்கி கடைவீதி வழியாகவே வெளியூர் செல்ல வேண்டி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அறந்தாங்கி நகரை ஒட்டி போர்க்கால அடிப்படையில் ஒரு புறவழிச்சாலை அமைக்கவேண்டும். அறந்தாங்கி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இது குறித்து காரக்கோட்டை சமூக ஆர்வலர் காளிமுத்து கூறியபோது அறந்தாங்கி நகரை சுற்றி விரைவில் ஒரு புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி போக்குவரத்தினை செய்யமுடியும் என்றார்.

தொடர்புடைய செய்தி