பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

75பார்த்தது
பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வாடிமா நகர் கடைத்தெருவில் ஆலங்குடி, கீரமங்கலம், மறமடக்கி செல்லும் சாலையில் தலா 150 மீ நீளத்திற்கு சாலையை விரிவுபடுத்த ஓப்பந்தம் விடப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் அளவீடு செய்யாமல் சாலை அமைப்பதாகக்கூறி பட்டா இடத்தில் உள்ளவர்கள் அளவீடு செய்து சாலை அமைக்கக்கோரி சாலைப்பணியை கடந்த சில வாரத்திற்கு முன்பு தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கீரமங்கலம் போலீசார் அளவீடு செய்து சாலை அமைப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அளவீடு செய்து சாலை அமைக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த மார்ச் 27ம் தேதி வாடிமா நகர் கடைவீதியில் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கீரமங்கலம் போலீசார், தேர்தல் நேரம் என்பதால் அளவீடு செய்வதில் தாமதமாகிறது என்றும், விரைவில் அளவீடு செய்து சாலை பணிகள் நடைபெறும் என உறுதியளித்தனர்.


இந்த நிலையில், நேற்று ஜிபிஎஸ் கருவி மூலமாக அளவீடு பணிகள் நடந்து வந்த நிலையில், இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறி அதிகாரிகள் அளவீட்டுப் பணியை பாதியில் நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி