புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் 515 கணேசன் என்பவருக்கு தனியார் தொலைக்காட்சி சார்பில், "எளியோர் நண்பன்" என்ற விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த 515 கணேசன் என்பவர் ஆதரவற்றோர் சடலங்களை தன்னுடைய சொந்த வாகனத்தில் எடுத்து அடக்கம் செய்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சேவை மாமணி, சிறந்த
சமூகசேவகர், மகாபெரியவா, மனிதநேய செம்மல் என 19 விருதுகளை வழங்கி
கௌரவித்துள்ளன. மேலும், பெங்களூரைச் சேர்ந்த பாரத் பல்கலைக்கழகம் டாக்டர்
பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.