ஆம்னி பஸ்களுக்கு தனி இடம்: பயணிகள் கோரிக்கை!

52பார்த்தது
ஆம்னி பஸ்களுக்கு தனி இடம்: பயணிகள் கோரிக்கை!
அறந்தாங்கி
புதுகை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய நகரமாக அறந் தாங்கி திகழ்கிறது. அறந்தாங்கியை சுற் றியுள்ள நுாற்றுக்கும் அதிகமான கிரா மங்களை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அறந்தாங்கி பஸ் நிலையம் வரவேண்டியுள்ளது. இதனால் எந்த நேரமும் பஸ் நிலையம் பரபரப்புடன் காணப்படும். அறந்தாங்கி நகரில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 3 பஸ்களும், புதுகை கிளை சார்பில் 2 பஸ்களும் இயக்கப்படுகின் றன. இதுதவிர 7 தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் இரவு ஒரே நேரத்தில் அறந்தாங்கி பஸ் நிலையம், தபால் நிலையம், அம்மா உணவகம் அருகில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பஸ்கள் வரும் வரை பயணிகள் சாலையோரம் காத்திருக்கும் நிலை உள்ளது. உடமை களுடன் அமர இடமின்றி சாலையோரம் நீண்ட நேரம் நிற்பதால் பயணிகள் கடும். சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னை செல்லும் பஸ்களுக்காக தனி பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தொடர்புடைய செய்தி