மரக்கிளைஉடைந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!

85பார்த்தது
மரக்கிளைஉடைந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!
கீரமங்கலம் அருகே சேந்தன்குடி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (63). டிரைவரான இவர், இரவு தனது இருசக்கர வாகனத்தில் கொத்தமங்கலம் சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்போனில் அழைப்பு வந்ததால் மோட்டார் சைக்கிளை மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு பேசி கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை உடைந்து அவர் மீது விழுந்தது. இதையடுத்து படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.