ரூ. 17. 70 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

68பார்த்தது
புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில் கறவை மாடுகள் வைத்திருப்போருக்கு இலவச கறவை இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியைச் சேர்ந்த 15 நபர்களுக்கு தலா ரூபாய் 58 ஆயிரம் மதிப்பிலான பால் கறவை இயந்திரங்களையும் அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலப்பு திருமண உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியைச் சேர்ந்த 9 நபர்களுக்கு தலா ரூபாய் 1. 00 லட்சம் என மொத்தம் ரூ. 9. 00 லட்சம் வழங்குவதற்கான அரசாணைகளையும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று 11. 07. 2024 காலை தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் திருமதி மேரி திருமதி சாந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாஜக மாநில விவசாய அணி தலைவர் திரு ராமு பொதுச் செயலாளர் சக்தி பாலன் மாவட்ட தலைவர் சுகுமார் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட துணைத் தலைவர் மணி ஞானசேகர் தக்ஷிணாமூர்த்தி லட்சுமிகாந்தன் சுகாதியா சக்திவேல் சிவா சேதுபதி வீரசெல்வம் சடா நகர் செல்வி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி