பணபலம் அதிகார பலத்தை தாண்டி மக்கள் பலம் வென்று உள்ளது.

62பார்த்தது
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் நன்றியை தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக முத்தியால்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி
தெரிவிக்கும் பிரச்சார வாகன பேரணியை முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நன்றி தெரிவிக்கும் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் பணபலம் அதிகார பலத்துடன் பாஜகவினர் தேர்தலை சந்தித்தார்கள் ஆனால் மக்கள் பலம் தான் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிய நரேந்திர மோடி மண்ணை கவ்வி இருக்கிறார் என்று குற்றம் சாற்றிய நாராயணசாமி, ராகுல்காந்தி மக்களோடு மக்களோடு இருந்து வருகிறார். ஆனால் நரேந்திர மோடி அம்பானி, அதானியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இன்று நமச்சிவாயம் படுதோல்வி அடைந்திருக்கிறார் என்றால் அது மக்கள் அளித்த தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.

இந்த நன்றி தெரிவிக்கும் பிரச்சார பயணத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :