புதுச்சேரி எல்லைபிள்ளைசாவடி பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி. அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேரமாக வீட்டில் இருந்து வேலை பார்த்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதை உண்மை என்று நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக ரூ. 13 ஆயிரத்து 550 செலுத்தினார். அதன்பின் தான் மோசடி செய்யப்பட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்தார். அதேபோல் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ரூ. 12 ஆயிரத்தை இழந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.