கார்கில் போரின் 25வது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு கொண்டாடும் வகையில் நேற்று காரைக்கால் மாவட்டம் மதகடி சிங்காரவேலர் சிலை அருகே இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜி. என். எஸ். ராஜசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.