காரை பிரதேஷ நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன ஆலோசனை கூட்டம் இன்று தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காரைப்பகுதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.