காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையல் கலை பயிற்சி மற்றும் ஆரி ஒர்க்ஸ் டிசைன் பயிற்சி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் விஜயராணி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 300 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.