காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலமானது நடைபெற்றது. இதில் காரைக்கால் பகுதியை சேர்ந்த பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியினை கொண்டு வந்து விற்பனை ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில் சுமார் 58. 91 குவிண்டால் எடைகொண்ட தரமான பருத்தி பஞ்சு ஏலத்தில் விடப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 7100 வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.