பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பை வெளியிடுக - ராமதாஸ் வலியுறுத்தல்

71பார்த்தது
பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பை வெளியிடுக - ராமதாஸ் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு விடுமோ? என்ற அச்சமும், கவலையும் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், நடப்பாண்டில் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பரிசுத் தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி