கடலூர் மாவட்டம் கொத்தட்டை பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வருவதை எதிர்த்து அப்பகுதி வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று (டிச.23) போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதனால் கடலூர் - சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.