2024-25 பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதலை பெற்றார். நேற்றைய கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பித்த அவர், இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார். பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டினார். பட்ஜெட் உரையில், பெண்களுக்கான உதவித்தொகை, வரிச்சலுகைகள் ஆகியவை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.