சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு

83பார்த்தது
சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் 2வது முறையாக சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சிக்கிம் ஆளுநர் லட்சுமண் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமாங் பதவியேற்பு விழா காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் இன்று (ஜுன் 10) நடைபெற்றது. அவருடன், எஸ்கேஎம் எம்எல்ஏக்கள் சோனம் லாமா மற்றும் அருண் குமார் உபேத்ரி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்தது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

தொடர்புடைய செய்தி