மேக கூட்டங்கள் 18 கி.மீ. அகலத்திற்கு படர்ந்திருப்பதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மேக கூட்டங்கள் 18 கி.மீ. அகலத்திற்கு படர்ந்திருப்பதால் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.