தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் 'பிரமயுகம்'

75பார்த்தது
தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் 'பிரமயுகம்'
மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள 'பிரமயுகம்' திரைப்படம் கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் மம்முட்டியின் நடிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் கேரளா பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழகத்திலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிட்ராக் அறிக்கையின் படி, தமிழகத்தில் வார இறுதியில் ரூ.73 லட்சம் வசூலித்துள்ளது. ராகுல் சதாசிவன் இயக்கிய இப்படம் கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதையம்சத்தில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி