டெல்லியைச் சேர்ந்த ஆர்யன்ஸ் என்பவர் எக்ஸ் வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில், இந்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழ் செயல்படும், IRCTC-ன் விஜபிக்களுக்கான ஓய்வறையில் இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் பூரான் கிடந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட நெட்டீசன்கள் ரயில்வே நிர்வாகத்தை வறுத்தெடுத்தனர். தற்போது இதற்கு பதிலளித்துள்ள IRCTC, இச்சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.