பூனம் பாண்டே அரசின் பிரச்சார தூதர் அல்ல: சுகாதார அமைச்சகம்!

55பார்த்தது
பூனம் பாண்டே அரசின் பிரச்சார தூதர் அல்ல: சுகாதார அமைச்சகம்!
நடிகை பூனம் பாண்டே அரசின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார தூதர் அல்ல என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் இறந்தார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. இது சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்திற்கு வழிவகுத்தது. இந்தச் செய்தி போலியானது என்றும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய "முக்கியமான விழிப்புணர்வை" பரப்புவதற்காக நடிகை மற்றும் அவரது குழுவினர் பொய்யான தகவலை பரப்பியது தெரியவந்தது. இது குறித்து அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அரசின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார தூதர் அல்ல என அரசு விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி