போலியோ சொட்டு மருந்து.. இன்று காலை தொடக்கம்

41030பார்த்தது
போலியோ சொட்டு மருந்து.. இன்று காலை தொடக்கம்
போலியோ சொட்டு மருந்து முகாம் (03.03.2024) இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க அழைத்துச் செல்லலாம். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி