குழந்தையுடன் பணியில் இருக்கும் பெண் போலீசார் (வீடியோ)

55பார்த்தது
உத்தரப் பிரதேசத்தில் நேற்று காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், மொராதாபாத்தில் உள்ள எஸ்எஸ் இன்டர் கல்லூரியில் தேர்வின் போது பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் கான்ஸ்டபிள் தனது மகனை கைகளில் தூக்கிக்கொண்டு ஒரு பக்கம் தாயாகவும், மறுபுறம் போலீஸ் அதிகாரியாகவும் தனது பொறுப்பை செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது தான் உண்மையான பெண் போலீஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி