"அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கேட்க வேண்டும்"

60பார்த்தது
"அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கேட்க வேண்டும்"
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை பேசியதை வரவேற்கிறோம். பிரதமர் மோடி தனது கட்சி மாநிலத் தலைவரின் பேச்சைக் கேட்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக் குழு உடனடியாக இதை விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி