பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் வாழ்த்து பெற்ற பிரதமர் மோடி

79பார்த்தது
பாஜகவை தொடங்கியவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் எல்.கே அத்வானி. வாஜ்பாய் அரசில் துணை பிரதமராகவும் இருந்த இவர், தற்போது வயது மூப்பின் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக நாளை மறுநாள் (ஜூன் 9) பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி, அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதேபோல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களையும் நேரில் சந்தித்து மோடி வாழ்த்து பெற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி