தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும்
பாஜக வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஆனால் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஓரளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கும் டெல்லி தலைமை, தமிழ்நாட்டில் இருந்து இருவருக்கு மத்திய அமைச்சர்
பதவி அளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி
அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகிய இருவருக்கும் அமைச்சர்
பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் மக்களை கவரும் வகையில் இருவருக்கும் சில முக்கிய இலாக்களை ஒதுக்க மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.