கோவையில் நட்சத்திர வேட்பாளர்கள் தொடர்ந்து தோற்பது ஏன்?

58பார்த்தது
கோவையில் நட்சத்திர வேட்பாளர்கள் தொடர்ந்து தோற்பது ஏன்?
அரசியல் கட்சிகளின் முக்கியமான தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் கோவை தொகுதியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதாலேயே அந்த தொகுதி நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்று வருகிறது. அங்கு கம்யூனிஸ்டு சார்பில், பொதுவாழ்வில் நேர்மையானவர், எளிமையானவர் என அறியப்படும் ஆர்.நல்லக்கண்ணு, மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்டு தோல்வியையே தழுவியுள்ளனர். மாறாக அவர்களை எதிர்த்து போட்டியிடும் உள்ளூர் வேட்பாளர்கள் வெல்கின்றனர். அதன்படி நட்சத்திர வேட்பாளர்களாக களம் இறங்கினாலும் வெளியூர்காரர்களை கோவை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி