"அந்த பயம் இருக்கணும் டா" - கேரளா காங்கிரஸ் 'நச்' கமெண்ட்

58பார்த்தது
"அந்த பயம் இருக்கணும் டா" - கேரளா காங்கிரஸ் 'நச்' கமெண்ட்
கேரளா காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது செம வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டங்களில், அரசியலமைப்பு சட்டத்தை சற்றும் மதிக்காமல் பேசி வந்த பிரதமர் மோடி, இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை வணங்குவது போன்று புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு கேரளா காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பதிவில், "அந்த பயம் இருக்கணும் டா" என துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய வசனத்தை பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு நாடு முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி