பரந்தூர் விவசாயிகள் எம்எல்ஏ வேல்முருகனிடம் மனு

60பார்த்தது
பரந்தூர் விவசாயிகள் எம்எல்ஏ வேல்முருகனிடம் மனு
மத்திய அரசின் புதிய விமான நிலைய அமைக்கப்பட உள்ள பரந்தூர், ஏகணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தவாக கட்சி தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகனிடம் மனு அளித்தனர். பரந்தூர் விவசாயிகள் சந்தித்கும் பிரச்சனைகளுக்காகவும், தங்களுக்காக தொடர்ந்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருவதற்காக வேல்முருகனுக்கு நன்றி தெரிவித்தனர்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதிப்பதற்காக கவன ஈர்ப்புத் தீர்மானம் அளித்துள்ள வேல்முருகனுக்கு, நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்து தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி