அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கை

82பார்த்தது
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கை
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர் மற்றும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை ஜூன் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெற 8ஆம் வகுப்பு , 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www. skilltraining. tn. gov. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது சம்மந்தப்பட்ட அரசு ஐ டி ஐ க்கு வந்து விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 – உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்..
அதற்கான கடைசிதேதி ஜூன் ஏழாம் தேதி ஆகும். விண்ணப்ப கட்டணம் ரூ 50-ஐ விண்ணப்பதாரர் Debit Card , Credit Card , Net Banking, GPay மூலம் செலுத்தலாம். வயது வரம்பு மாணவர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை ஆகும். மாணவிகளுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் www. skilltraining. tn. gov. in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி