பாதையை மீட்டு தர கோரி பொதுமக்கள் மனு

54பார்த்தது
பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழக்கமாக சென்று வந்த சுடுகாட்டு பாதையினை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அதனை மீட்டு தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதைக்கு செல்லும் வழியில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் புதிதாக வயல் வாங்கியுள்ளார். அவர் அருந்ததியர் இனமக்கள் சென்று வந்த புறம்போக்கு பாதையையும், தனக்கு சொந்தம் என்று மறித்துக்கொண்டு பொதுமக்களை பயன்படுத்த விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டு வருவதோடு தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.
இது குறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி