தென் கொரியாவில் கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சியோலில் 40 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. மேலும், அண்டை நாடான வடகொரியாவின் சில பகுதிகளில் 10 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவுகள் பதிவாகி உள்ளன.