"நான் காக்கிநாடா துறைமுகத்தில் நடக்கும் அரிசி கடத்தலை தடுக்க வந்தேன். கடந்த ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழல் இன்னும் தொடர்கிறது. யாருக்கும் பொறுப்பு இல்லை" என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போதைப்பொருள் விவகாரத்தில் குற்றவாளிகளைத் தடுக்க ஆந்திர அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பவன் கல்யாண் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.