மக்கள் தொடர்பு திட்டம் முகாம் - ஆட்சியர் தகவல்

2243பார்த்தது
மக்கள் தொடர்பு திட்டம் முகாம் - ஆட்சியர் தகவல்
பெருமத்தூர் வடக்கு மஜீரா, நல்லூர் கிராமத்தில் ஜனவரி 10 தேதி அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் வடக்கு மஜீரா, நல்லூர் கிராமத்தில், வரும் ஜனவரி பத்தாம் தேதி புதன் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, பெருமத்தூர் வடக்கு கிராமம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெருமத்தூர் வடக்கு கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறம் நாளிற்கு முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என ஜனவரி 3ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you