கிடப்பில் உள்ள சாலை பணியை முடிக்க கோரி ஆட்சியரிடம் மனு

64பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டி சுமார் 6 மாத காலம் ஆன நிலையில், விரைந்து பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் தெற்குதெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழைய சாலை ஜேசிபி மூலம் தோண்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள், சாலையில் உள்ள மரங்கள் ஆகிவற்றை அப்புறப்படுத்திய துறை சார்ந்த அலுவலர்கள், தெருவில் உள்ள சிலர் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுப்பதாக கூறி, தொடர்ந்து சாலை பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் பொதுமக்கள் தோண்டப்பட்ட சாலையில் உள்ள மேடு பள்ளங்களை தாண்டி பயணிக்க வேண்டி இருப்பதாகவும், அவசரத்திற்கு இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், பலமுறை இது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவை நேரில் சந்தித்துமனு கொடுத்தனர். மனு பெற்ற ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி