பெரம்பலூர்: வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைப்பு

1518பார்த்தது
நடந்து முடிந்த பாராளுமன்றதேர்தலில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி மொத்தம் 1665 வாக்குப்பதிவு மையங்களில், வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக, வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் சுற்றுச்சாலை பகுதியிலுள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக வைக்கப்பட்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு செய்யப்பட்ட பின், ஏப்ரல் 20ஆம் தேதி அனைத்து கட்சி வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் முன்னிலையில் அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் என தனித்தனியாக ஆறு அறைகளில் தொகுதி வாரியாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றை பாதுகாக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள், மற்றும் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி