நுண்ணுயிர் பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு

551பார்த்தது
பேரளி, சித்தளி, வயலப்பாடி, (ம) எசனை ஆகிய கிராமங்களில், தோட்டக்கலைத்துறை (ம) மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் எந்தவகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பது குறித்தும் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரளி கிராமத்தில் தேசிய ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் முருகேசன் என்ற விவசாயியின் நிலத்தில் ரூ. 87, 500 அரசு மானியத்தில் வெங்காய கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட ஆட்சியர் வெங்காய வளர்ப்பு குறித்து கேட்டறிந்தார்
பின்னர், சித்தளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தில் மல்பெரி சாகுபடிக்காக 75 % அரசு மானிய உதவியுடன் 2 ஹெக்டரில் ரூ1, 97, 900 மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்
தொடர்ந்து, வயலப்பாடி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தமிழ்ச்செல்வன் என்ற விவசாயி நிலத்தில் அரசு மானிய உதவியுடன் ரூ6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையினை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஓலைப்பாடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்ற விவசாயினுடைய வயலில் ரூ1, 77, 500 அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழல் வலைகுடிலில் நாற்றங்கால் மூலமாக கத்தரி, தக்காளி மிளகாய் செடி வளர்ப்பு செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தொடர்புடைய செய்தி